உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் 1905-ஆம் ஆண்டு, 29 ஆம் தேதி தயான் சந்த் பிறந்தார். அவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் இயல்பாகவே உடலைப் பேணுவது மற்றும் ஒரு நல்ல விளையாட்டு வீரனாக மாறுவதற்குரிய தகுதிகள் அவரிடம் பள்ளிப்பருவத்தில் காணப்பட்டன. ஹாக்கி விளையாட்டில் தனிக்கவனம் செலுத்தி வந்தார். 1922-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயாக பணியில் சேர்ந்தார்.
தனது தகுதி மற்றும் திறமையின் காரணமாக ஒரு நல்ல ஹாக்கி விளையாட்டு வீரனாக உருவெடுத்த அவர் 1926 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு பயணம் செய்த இந்திய ராணுவ ஹாக்கி அணியில் இடம் பெற்றார். அங்கே வெளிப்படுத்திய தனது திறமைகளின் காரணமாக இந்திய ஹாக்கி அணியில்.இடம் பிடித்தார்.
பின்னர் 1928-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி போட்டியில் தனி ஒருவனாக போராடி இந்தியாவுக்கு தங்க பதக்கம் பெற்றுத் தந்தார். தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தார். குறிப்பாக பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து ஏழு கோல்கள் அடித்து சாதனை படைத்தார்.
இத்தனை புகழ் வாய்ந்த தயான் சந்த் 1979 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி மரணம் அடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குவைத்தில் போர்நிறுத்தத்தை மீறி ஈரான் தாக்குதல்: எண்ணெய் வளாகங்கள், மின் நிலையங்கள் பலத்த சேதம்!

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி - புகைப்படங்கள்

சவுக்கு சங்கர் ஆந்திரத்தில் கைது!

அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பாக மாறும்: இபிஎஸ் பிரசாரம்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


